சென்னையில் இன்று 3 இடங்களில் விஜய் பிரசாரம்: போலீசார் அனுமதி

சென்னை: சென்னையில் 3 இடங்களில் நடிகர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். சென்னையில் நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்னர் பெரம்பூர், கொளத்தூர் பகுதியில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார். பின்னர் பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுத்தும், அந்த நேரத்தில் வராமல் சுமார் 6 மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

அதில் எப்போது வேண்டுமானாலும் விஜய் வருவார் என்று தவெகவினர் தெரிவித்தனர். ஆனால் போலீசாரோ ஒரு மணி நேரம்தான் அனுமதி வழங்க முடியும். நீங்கள் திட்டமிட்டு சாலையை முடக்கினால் போக்குவரத்து சிக்கல் ஏற்படும். அதனால் அனுமதி தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் சென்னையில் பிரசாரம் செய்யாமல் வெளி மாவட்டங்களில் மட்டும் விஜய் பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள முத்துரங்கன் சாலை, ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம் ரித்தர்டன் ரோடு ஆகிய இடங்களில் நடிகர் விஜய் இன்று பிரசாரம் செய்கிறார். அவருக்கு ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், மதியம் 2 மணி முதல் 3 மணி வரைக்குள் பிரசாரம் செய்து முடிக்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனையின்பேரில் அனுமதி அளித்துள்ளனர்.

Related Stories: