தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன வாங்கலாம் என ‘டிஸ்கஷன்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: கே.வி.குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார். அடுத்து, “இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன்.

2026 தேர்தல் ஓட்டிங் (Voting)-க்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற ஓட்டிங் (Voting) தொடங்கியாச்சு. தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த ‘டிஸ்கஷன்’தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் ‘choice’-ஆகத்தான் இருக்கணும்.

அவர்கள்தான் ‘இல்லத்து அரசிகள்’, ‘குடும்பத்தலைவிகள்’! 2026 ஓட்டிங்-ல் ‘‘தமிழ்நாடு அணியா – டெல்லி அணியா?” என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் ‘பெண்கள்தான்’ எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: