சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடக்கும் மாபெரும் பேரணியில் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி பங்கேற்கிறார். எனவே நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து மநீம தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெறும் பேரணி சேலத்தில் இன்று நடைபெற உள்ளது.
பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி கலந்து கொள்கிறார். இன்று மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே பேரணி தொடங்கி கோட்டை மைதானத்தில் நிறைவுபெறுகிறது. மநீம நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக பேரணியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
