இந்தியாவில் பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம், நீதியை நிலைநாட்டுவோம்: அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: இந்தியாவில் பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம், நீதியை நிலைநாட்டுவோம் என அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவு:“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்” என்றார் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம். இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: