வேளாண் மாணவர்கள் பயிர் பரிசோதனை

மல்லசமுத்திரம், பிப்.4: நாகர்பாளையம் கிராமத்தில் வேளாண்கல்லூரி மாணவர்கள் பயிர் பரிசோதனை நடத்தினர். மல்லமுத்திரம் வட்டாரத்தில் வேளாண்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நாகர்பாளையம் கிராமத்தில் பயிர் உற்பத்தி மதிப்பீட்டிற்காக நடத்தப்பட்ட பயிர் வெட்டு பரிசோதனையில், புள்ளியியல் துறை துணை இயக்குநர் பெரியசாமி கலந்து கொண்டு, பயிர் வெட்டு பரிசோதனையின் முக்கியத்துவம், நடைமுறை செயல்முறை மற்றும் அரசுத் திட்டங்களில் இதன் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். விவசாய நிலத்தில் நேரடியாக பயிர்களை வெட்டி, மகசூல் கணக்கீடு செய்வது குறித்து மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் பயிர் உற்பத்தி கணக்கெடுப்பு, தரவு சேகரிப்பு மற்றும் புள்ளியியல் ஆய்வின் அவசியம் குறித்து மாணவர்கள் தெளிவாக அறிந்து கொண்டனர். இந்நிகழ்வானது, மாணவர்களின் நடைமுறை அறிவை மேம்படுத்துவதுடன், விவசாயத் துறையின் களப்பணிகளை நேரடியாக அறிந்து கொள்ள உதவியாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: