நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- நாமக்கல்
- பரிகார நாள்
- நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- துர்காமூர்த்தி
