தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், ஜன.24: நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படித்த 148 பேர் கலந்து கொண்டனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து 25 தனியார் நிறுவனங்களை சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். இதில் விருப்பமும், உரிய கல்வித் தகுதியும் உடைய 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

Related Stories: