அரசு பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் திருட்டு

பள்ளிபாளையம்,ஜன.28: பள்ளிபாளையம் அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து, அறையில் மறைவான பகுதியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து மர்ம நபர்கள் பீரோவை திறந்து ஒரு லேப்டாப்பை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியர் பள்ளிபாளையம், போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: