சேந்தமங்கலம், ஜன.30: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாபட்டி, பழையபாளையம், கோம்பை, போடிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொல்லிமலை அடிவாரத்தில், விளையும் பூக்கள் நன்கு திரட்சியாக மனம் மிகுந்திருப்பதால், வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்து வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் விளையும் பூக்களை நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். எருமப்பட்டி பகுதியில், தற்போது குளிர் காற்று வீசி வருவதால், பூக்களின் வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.1800 வரை விற்கப்பட்ட குண்டுமல்லி, நேற்று ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பண்டிகை காலம் நிறைவு பெற்றதால், பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் குண்டுமல்லி விலை குறைந்தது. தைப்பூச திருவிழா முடிந்த பிறகு பூக்களின் விலை குறையும்,’ என்றனர்.
குண்டுமல்லி பூ விலை குறைந்தது
- Senthamangalam
- நாமக்கல் மாவட்டம்
- Erumapatti
- நவலடிபட்டி
- Alanganatham
- பொட்டிரெட்டிபட்டி
- காவக்காரன்பட்டி
- முத்துகாபட்டி
- பழாலயம்
- கோம்பை
- போடிநாயக்கன்பட்டி
- கொல்லி மலைகள்
