உலகக்கோப்பை டி20 இந்தியாவுடன் பாக். விளையாட மறுப்பு

லாகூர்: உலகக் கோப்பை டி20 போட்டிகள் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன. இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் வெளியேற்றப்பட்ட விவகாரத்தால், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வங்கதேசம் அணி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்றாக, வரும் பிப். 15ம் தேதி கொழும்புவில் இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் ஆடாது என பாக். அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாக். அரசு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாக் அணி ஆட, பாக். அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், வரும் பிப். 15ம் தேதி கொழும்புவில் இந்தியாவுடன் நடப்பதாக அறிவிக்கப்பட்ட போட்டியில் பாக். அணி பங்கேற்காது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: