சண்டிகர்: ஐபிஎல் 19வது டி20 தொடரின் 4வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்ய குஜராத்தின் ஓப்பனர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். சாய் சுதர்சன் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக சுப்மன் கில்லும் தனது பங்கிற்கு 37 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் 38 ரன்னிலும், கிளின் பிலிப்ஸ் 25 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னிலும், ஷாருக்கான் 4 ரன்னிலும் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக வைசாக் 3 விக்கெட்டும், சாகல் 2 விக்கெட்டும் எடுத்தனர். அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கி விளையாடியது. இதன் பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் கூப்பர் 72 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
