கவுகாத்தியில் ராஜஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை; முதல் போட்டியில் முத்திரை பதிக்குமா சென்னை?

 

கவுகாத்தி: ஐபிஎல் தொடரில் கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே என அதிரடி பேட்டிங் படை உள்ளது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை விட்டுக் கொடுத்து, அவர்களுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட சஞ்சு சாம்சன் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்ததுடன், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியதால் ஐபிஎல்லில் சாம்சன் ஜொலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங்கை பொறுத்தவரை மேட் ஹென்ரி அணியில் சேர்ந்திருப்பது கூடுதல் பலம். நாதன் எல்லீஸிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள ஸ்பென்சர் ஜான்சன், ராகுல் சாகர், கலீல் அகமது, ஜேமி ஓவர்டன் ஆகியோர் பவுலிங்கில் மிரட்டக்கூடும்.

இதனிடையே காயம் காரணமாக ஐபிஎல்லி முதல் சில போட்டிகளில் டோனி ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை ரியான் பராக் தலைமையிலான அணியில் துருவ் ஜூரல், வைபவ் சூர்யவன்ஷி, தோனோவன் பெரைரா, டேசன் சனகா, ஹெட்மேயர் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ஆல் ரவுண்டர் பணியை ரவீந்திர ஜடேஜா, கேப்டன் ரியான் பராக், டேசன் சனகா மேற்கொள்ள உள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை பிஷ்னோய், சந்தீப் சர்மா, மில்னே, ஆர்சர் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்குமே இது முதல் போட்டி என்பதால் கவுகாத்தியில் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம். கவுகாத்தி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும், இரவில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால் சேஸ் செய்யும் அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

 

Related Stories: