சிஎஸ்கே.வுக்கு எதிராக 15 பந்தில் அரைசதம்; பவர்பிளேயில் அதிரடிதான்: சூர்யவன்ஷி கலகல

மும்பை: நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் தனது முதல் ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2020ம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, அதில் 9 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான சாதனையை வைத்திருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி. வெறும் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

இந்நிலையில் வைபவ் சூர்யவன்சி தனது 15 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘என்னுடைய பிறந்தநாளுக்காக இரவு 12 மணிக்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தனர். எப்படியும் என் முகத்தில் கேக் அடிப்பார்கள் என தெரியும். அதற்கு பயந்து நான் முன்பே தூங்கிவிட்டேன். இன்றைய ஆட்டத்தில் பவர் பிளேயில் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். துவக்கத்தில் புதிய பந்தை எதிர்கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது.

ஆனால் நேரம் ஆக ஆக, பந்துபேட்டிற்கு நன்றாக வந்தது. நான் எப்போதுமே தற்காத்து விளையாடுவது குறித்து யோசிக்க மாட்டேன். பவர் பிளேயில் அதிரடியாக ரன்குவித்து போட்டியை எங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எனது திட்டமாக இருந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் அதை செய்யவே விரும்புகிறேன். பார்ட்னர் ஜெய்ஸ்வால் அடிக்கடி உற்சாகத்தையும் கொடுப்பார். இது எனக்கு பெரும் உதவியாக இருந்தது’’ என்றார்.

Related Stories: