ஐபிஎல்லில் இன்று டெல்லி- லக்னோ டிஷ்யூம்… டிஷ்யூம்

லக்னோ: ஐபிஎல் 19வது தொடரின் 5வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட்டும், டெல்லி அணிக்கு அக்சர் படேலும் தலைமை ஏற்று நடத்துகின்றனர். லக்னோ அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன் என அதிரடி காட்ட உள்ளனர்.

பவுலிங்கில் முகமது சமி, ஆவேஷ் கான் மிரட்ட உள்ளனர். டெல்லியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேஎல்.ராகுல், நித்திஷ் ராணா, ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் என பலமாகவே உள்ளனர். பவுலிங்கில் லுங்கி நிகிடி, குல்தீப் யாதவ் மிரட்ட உள்ளனர். இரு அணிகளிலுமே பேட்டிங்கில் அதிரடியும், பவுலிங்கில் மிரட்டலும் காட்டும் வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* நேருக்கு நேர்
* லக்னோ, டெல்லி அணிகள் இதுரை நேருக்குநேர் 7 போட்டிகளில் ஆடியுள்ளன.
* இதில் டெல்லி 4 போட்டியிலும், லக்னோ 3 போட்டியிலும் வென்றுள்ளன.
* டெல்லி அணி அதிகபட்சமாக 257 ரன்கள் குவித்துள்ளது.
* லக்னோ அணி அதிகபட்சமாக 257 ரன்கள் குவித்துள்ளது.
* டெல்லி அணி குறைந்தபட்ச ஸ்கோர் 66 ரன்கள்.
* லக்னோ அணி குறைந்தபட்ச ஸ்கோர் 82 ரன்கள்.

Related Stories: