பிரபல நடிகை மஹிராவுடன் லவ்வில் விழுந்த சிராஜ்?

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ், பாலிவுட் நடிகை மஹிரா ஷர்மா இருவரும் ஒரே காபி ஷாப்பில் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹிரா ஷர்மா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள், பிராண்ட் விளம்பரங்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்ஜூம் காதல் வலையில் விழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. சினிமா பார்த்துவிட்டு அணி ஹோட்டலுக்குத் திரும்பும் சிராஜ் – மஹிரா ஜோடி போன்ற பதிவுகள் இணையத்தளத்தில் வலம் வருகின்றன. இந்நிலையில் இருவரும் ஒரே காபி ஷாப்பிலிருந்து வெளியேறியது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த காதல் வதந்திகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது. இந்தக் காதல் வதந்திகளை முகமது சிராஜோ அல்லது மஹிரா ஷர்மாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Related Stories: