கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

திருச்செங்கோடு, ஜன.20: திருச்செங்கோடு கைலாசம்பாளையம் அடுத்துள்ள ஒடுவம்பாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கிணறு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, உணவு தேடி வந்த புள்ளி மான், அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், கிணற்றுக்குள் புள்ளி மான் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு, திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி மானை பாதுகாப்பாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காலில் காயத்துடன் காணப்பட்ட மானுக்கு உரிய சிகிச்சையளித்து, வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Related Stories: