மளிகை கடையில் பதுக்கிய 54 கிலோ குட்கா பறிமுதல்

ராசிபுரம், ஜன.20: ராசிபுரத்தில், மளிகை கடையில் பதுக்கிய 54 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி, உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் கதிர்வேலு(52). இவர், ராசிபுரம் -நாமக்கல் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கதிர்வேலுவின் கடையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 39 கிலோ குட்கா, 2 கிலோ கூலிப் உள்பட மொத்தம் 54 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கதிர்வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 54 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Related Stories: