நாமக்கல், ஜன.21: நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவ, மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி தலைமை வகித்து 130 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினார். கல்லூரி முதல்வர் காசிம் முகம்மது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
