கார் மோதி விவசாயி பலி

திருச்செங்கோடு, ஜன.21: திருச்செங்கோடு அருகே டூவீலர் மீது கார் மோதியதில் விவசாயி பலியானார். திருச்செங்கோடு அருகே பெத்தாம்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் காளியண்ணன்(75). விவசாயி. இவர் நேற்று தனது மகள் வீடான கொல்லப்பட்டி தோட்டத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மயில் சாலை அருகே வந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், பலத்த காயமடைந்த காளியண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காளியண்ணன் மகள் சத்யா, திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி வந்த உலகப்பம்பாளையம் செந்தில்குமார்(58) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: