விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர்கள் நியமனம்

 

விருதுநகர், ஜன. 20: விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவராக ராஜ்மோகனை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் கிழக்கு மேற்கு மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிகளை கிழக்கு மாவட்டமாகவும், இந்தப் பகுதிகளுக்கு சிவஞானபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கிருஷ்ணமூர்த்தி கிழக்கு மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜபாளையம் முதலான சட்டப்பேரவை தொகுதிகளை மேற்கு மாவட்டமாகவும், இந்த பகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: