வயல் வரப்புகளில் உளுந்து ஊடுபயிர் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்

நாகப்பட்டினம், ஜன.20: திருமருகல் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே அகரகொந்தகை ஊராட்சியில் வாழ்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து காளியம்மன் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும், சீயாத்தமங்கை -மானாம்பேட்டை இடையே நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் போடப்பட்டு வரும் தார் சாலை பணி, சேஷமூலை ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.47 லட்ச த்து 75 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் கட்டுமான பணிகளையும், கோவில் சீயாத்தமங்கையில் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடம் ரூ.34 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் கட்டுமான பணிகளையும் திட்ட இயக்குநர் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி, சீயாத்தமங்கை ஊராட்சி, கொத்தமங்கலம் ஊராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் அன்பழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories: