ஒரத்தநாடு, ஜன.20: ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 11ம் வகுப்பு மாணவர்கள் 112 பேருக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலன் முன்னிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அனைத்துதுறை ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சி இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
