அறந்தாங்கி, ஜன.20: புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு ஒன்று அனுப்பி உள்ளார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது,புதுக்கோட்டை மாவட்ட கல்லணைகால்வாய் பாசன பகுதியில் கடந்த 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு இரவு பகலாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது மற்றும் சூறாவளி காற்றின் வீசியது.பயிர்கள் அறுவடை செய்ய 15 தினங்கள் உள்ள நிலையில் நெல்கதிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி தரையோடு வயல்களில் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சுமார் 70க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெல் கதிர்கள் முளைப்பு தன்மை ஏற்பட்டு உள்ளது. இதனால் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் நேரில் பார்வையிட்டு பாதிப்பு கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்குமாறு கேட்டுகொண்டு உள்ளது. மேலும் பயிர்காப்பீடு நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடுசெய்து பயிர்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம் தொடர் மழையால் வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள்
- அறந்தாங்கி
- புதுக்கோட்டை
- மாவட்டம்
- கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு
- ஜனாதிபதி
- கொக்குமடை ரமேஷ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கல்லானை கால்வாய்
- புதுக்கோட்டை மாவட்டம்
