வாலிபர் உள்பட 2 பேருக்கு போலீஸ் வலை பேரளத்தில் மகன்கள், மகளுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் தந்தை தற்கொலை

திருவாரூர், ஜன. 20: திருவாரூர் அருகே மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீசரதிற்குட்பட்ட வேலங்குடி கிராமம் மணப்பட்டம் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணையன் (75). முதியவரான இவரது மனைவி கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், 2 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகி அவரது கணவரும் இறந்துவிட்டார். இந்நிலையில் மகள்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் முதியவருடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் மகள் மற்றும் மகன்களுக்கு அதிக வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையே என முதியவர் கண்ணையன் ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டின் எதிரே செல்லும் நாட்டாறு வடக்கு கரையில் இருந்து வரும் தேக்கு மரம் ஒன்றில் மேற்படி முதியவர் கண்ணையன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு தெரிய வரவே, இது தொடர்பாக மகன்களில் ஒருவரான சசிகுமார் என்பவர் பேரளம் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் கண்ணையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகாததால் தான் முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: