மணப்பாறை, ஜன. 20: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலரில் பாம்பு இருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவர் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்றுமாலை திருச்சி சாலையில் டூவீலரில் மனோகரன் சென்றுக்கொண்டிருந்தபோது, டூவீலர் கைப்பிடி அடிபகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டார். சுதாரித்துக்கொண்ட மனோகரன் சாலையோரம் டூவீலரை நிறுத்தி கீழே இறங்கினார். அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் டூவீலர் பாகங்களை அகற்றியபோது, அங்கு பேட்டரி பகுதியில் சுமார் 4 அடி நீள கொம்பேரி மூக்கன் பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது தெரியவந்தது. டூவீலரில் இறங்கிய பாம்பு ஓடி சென்றது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த டூவீலரில் பாம்பு இருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
