நாகப்பட்டினம், ஜன.20: திருமருகல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (20ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி துணைமின் நிலையத்திலிருந்து மின் வியோகம் பெறும் பகுதிகளான திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வவ்வாலடி, பொறக்குடி, ரெட்டக்குடி, போலகம், கிடாமங்கலம், செம்பியநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும், மருங்கூர் மின்பாதைகளில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான மருங்கூர், சேகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, ஆலத்தூர், கணபதிபுரம், இடையாத்தங்குடி, சேஷமுலை பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.இத்தகவலை உதவிசெயற்பொறியாளர் மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருமருகல் பகுதிகளில் மின் விநியோகம் இன்று நிறுத்தம்
- Thirumarugal
- நாகப்பட்டினம்
- திருமருகல் துணை மின்நிலையம்
- திருக்கண்ணபுரம்
- திருப்புகளூர்
- வவ்வலடி
- பொரக்குடி
- ரெட்டக்குடி
- போலகம்
- கிடாமங்கலம்
- செம்பியநல்லூர்
