திருவாரூர், ஜன. 20: குடவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்குடி என்ற இடத்தில் போர்செட் ஒன்றின் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மேல நாணச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (62), சேங்காலிபுரம் ரவிச்சந்திரன் (65), காப்பானமங்கலம் தனபதி (50), புதுக்குடி சரவண பெருமாள் (46), முகுந்தனூர் பாஸ்கர் (52) மற்றும் ஆயக்குடி ரமேஷ் (48) ஆகிய 6 பேர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரூ.8 ஆயிரத்து 600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதே போல் சேங்காலிபுரம் ரோடு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 53 பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (42) மற்றும் மாறன் (53), கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (56), திருவிடைசேரி கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் (35) மற்றும் மாதவன் (44) மற்றும் மயிலாடி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் (35) ஆகிய 6 பேர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் ரூ.630 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
