வாட்டி வதக்கும் பனிப்பொழிவு களை கட்டிய சுவட்டர் விற்பனை

கரூர், ஜன. 20: வாட்டி வதக்கும் பனிப்பொழிவு காரணமாக பனிக்கு பாதுகாப்பான சுவட்டர் விற்பனை கரூரில் களை கட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களுக்கு நிகராக கரூரில் பனிப் பொழிவு காலை 8 மணி வாட்டி வதக்கி வருகிறது. இந்த பனிப் பொழிவு காரணமாக காலை நேரங்களில் வாக்கிங் செல்லும் அனைவரும் குல்லா சுவட்டர் போன்றவற்றை பாதுகாப்பாக உடுத்திக் கொண்டு வாக்கிங் செல்வதோடு, பல்வேறு வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். இதனை மையப்படுத்தி, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளியணை சாலை, லைட்ஹவுஸ கார்னர், வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் ஆகிய சாலைப் பகுதிகளை ஒட்டி சுவட்டர் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் குல்லா போன்றவை அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அதன் தேவை அவசியம் என்பதால் பொதுமக்களும் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories: