குன்னம் அருகே கீழப்புலியூரில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

குன்னம், ஜன.20: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கு கீழப்புலியூர் கிராமத்தில் நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. மக்களை தேடி அவர்களின் குறைகளை தீர்வுகான கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடிய பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே கீழப்புலியூர் (வடக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: