திருவாரூர் அருகே கொடுக்கல், வாங்கல் பிரச்னை நண்பருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர், ஜன. 20: திருவாரூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நண்பரை அரிவாளாள் வெட்டிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி தாலுகா அபிஷேக கட்டளை பகுதியில் வசித்து வருபவர் கவாஸ்கர் (35). அதேபோல் நாகை மாவட்டம் கீவலூர் தாலுக்கா சிதாய்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் மாரியப்பன் (35). நண்பர்கள். இருவர் மீதும் திருத்துறைப்பூண்டி மற்றும் ஆலிவலம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இருவரும் கூலி தொழில் செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக நேற்று தனது நண்பரான மகேந்திரன் என்பவருடன் கவாஸ்கர் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி சொந்த வேலையாக பைக்கில் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தென்னவராயநல்லூர் என்ற இடம் அருகே தனது நண்பருடன் பைக்கில் பின் தொடர்ந்து வந்த மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் கவாஸ்கரை வெட்டியுள்ளார். அப்போது இடது கையில் பலத்த காயமடைந்த கவாஸ்கரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஒன்று கூடவே அங்கிருந்து மாரியப்பனும், அவரது நண்பரும் தப்பித்து சென்றனர். இதையடுத்து கவாஸ்கர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா போலீஸ்இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Related Stories: