சிவகாசி, ஜன.20: சிவகாசி அருகே பட்டாசு பெண் தொழிலாளி வீட்டில் நகை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாண்டி மனைவி காளியம்மாள்(40). இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வந்து பார்த்த போது வீட்டின் கதவும் பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகையும் காணாமல் போனது கண்டு காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
