திருவாடானை, ஜன.20: மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை திருவாடானை வழியாக செல்கிறது. இந்த சாலையில், அரசூர் கிராமத்தில் இருந்து தொண்டி நகரம் வரை, சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. இந்த கருவேல மரங்கள் சில இடங்களில் சாலையை ஒட்டி வளர்ந்து, எதிரே வாகனம் வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த மரங்கள் சாலையின் விளிம்புகளை மறைப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே முட்செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
