மதுரை, ஜன. 20: பொங்கல் பண்டிகை முடிந்து, தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு திரும்பிச்சென்ற தென் மாவட்ட மக்களால், மதுரை ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நேற்று 2வது நாளாகவும் கூட்டம் அலைமோதியது. இவர்களுக்காக 1230 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசுத்தரப்பில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சென்னை, விழுப்புரம், வேலூர், தஞ்சை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர், பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
