தொழிற்பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாம்

 

மதுரை, ஜன. 20: தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026-27ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் ஏற்படுத்துதல், தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவக்குதல் போன்றவற்றுக்கு விருப்பமுடையோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2026-27ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற தொழிற்பள்ளி ஒரு இணைய தள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் மூலம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும். இந்த விண்ணப்பங்களை பிப்.28க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: