நத்தம், அழகர்கோவிலில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

 

நத்தம், ஜன. 20: அகிலந்திய அளவில் நேற்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கி 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து திண்டுக்கல் வனக்கோட்டத்திற்குட்பட்ட நத்தம், அழகர்கோவில் வனச்சரக பகுதிகளில் வனத்துறையினர் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு மாமிசம் மற்றும் தாவர உண்ணிகள் கணக்கெடுக்கும் பணியும், இதில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, மான் இன வகைகளின் நடமாட்டம் குறித்தும், அடுத்து வரும் நாட்களில் (2 கிமீ) நேர்கோட்டு பாதை கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. மேலும் குளம்பியங்களின் விபரம், தாவரங்கள் மற்றும் மனித இடையூறுகள் பற்றிய விபரங்களும் சேகரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: