குளச்சல்,ஜன.20: குளச்சல் நகர அ.தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது நாள் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்ந எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், நகர முன்னாள் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பஷீர்கோயா, மாகீன், செர்பா, ஜெகன், வக்கீல் சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
