சென்னை: தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம் தேதி வழங்குகிறார். திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட இருக்கிறது, தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கு வழங்கப்பட இருக்கிறது, அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்படுகிறது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வெ.இறையன்புக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் வழங்கப்படுகிறது. விருது தொகை ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம். தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாள் (16ம் தேதி) அன்று வழங்குகிறார்.
