அவனியாபுரம்: மதுரை, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் நாளன்று (ஜன. 15) மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் பணி சிவகுருநாத சுவாமி கோயில் முன்பு நேற்று காலை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வருமாறு முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருவதாக உறுதியளித்துள்ளனர்’’ என்றார்.
