அதிமுக செயலாளர் மாஜி பால்வள மந்திரி ராமச்சந்திரன். தண்டராம்பட்டு, திருவண்ணாமலை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி கண்டதால் ஒதுக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு சமீபத்தில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் வாய்ப்பு கிட்டியது. அதனால், இந்த தேர்தலில் தொகுதி மாறி கீழ்பென்னாத்தூரில் கால்பதிக்க திட்டமிட்டிருக்கிறார்.
பாஜ நெருக்கடியால் தொகுதி பங்கீடே கேள்விக்குறியாக இருக்கிற நேரத்தில், இவரு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஓட்டு கேட்கவே தொடங்கிட்டாராம். அதோடு, சில நாட்களா பறக்கும் படை கண்ணில் மண்ணை தூவிட்டு, வீடு வீடா ஹாட் பாக்ஸ் கொடுக்குறாங்களாம்.ஆனால், அந்த தொகுதி மக்கள் பல இடங்களில் ஹாட் பாக்சை வாங்காமல் புறக்கணித்து எதிர்ப்பு காட்டுவதால் மாஜி மந்திரி ஷாக்காகி கிடக்குறாராம்.
தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத உங்களுக்கு இப்பதான் எங்க ஞாபகம் வந்து பாசம் பொத்துக்கிட்டு வருதா என எதிர் கேள்வி கேட்கிறாங்களாம் மக்கள். அதோடு விட்டா பரவாயில்லை..! எங்க வீட்டு நல்லது கெட்டதுக்கெல்லாம் சாதி, மதம், கட்சி பேதமில்லாத கலந்துகிட்டு, ஊர் வளர்ச்சிக்காக தினந்தினம் ஓடி வந்தவரு துணை சபாநாயகர் பிச்சாண்டி.
எந்த பந்தாவும் இல்லாம எப்பவும் அவர் வீட்டு கதவு மக்களுக்காக திறந்து கிடக்கும்னும் போற இடத்துல எல்லாம் மக்கள் பேசுறத பாத்து, இப்பவே கலங்கியிருக்கிறாராம் ராமச்சந்திரன். என்ன பண்றது..! தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறி மாறி ஓடி போனா இந்த நிலமைதான் என சொந்த கட்சிக்காரங்களே கமெண்ட் அடிப்பதை காதுபட கேட்க முடிகிறது.
