பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு ‘செட்டப்’… நாதக பெண் வேட்பாளர் அலப்பறை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் தனி என 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கீழ்வேளூர் தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார். இவர், நாதக சார்பில் நாகப்பட்டினம் எம்பி வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்த போது, தேர்தல் அதிகாரியான ஜானிடாம்வர்கீஸிடம் விடுதலை புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக என கூறி வேட்பு மனு தாக்கல் செய்து தனது நடிப்பை அரங்கேற்றினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்குவளை அருகே தொழுதூர் கிராமத்தில் வாக்குகள் சேகரிக்க சென்றபோது ஒரு மூதாட்டி கார்த்திகாவை தடுத்து எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என கூறினார். இதைக்கேட்ட வேட்பாளர் கார்த்திகா, உங்களுக்கு என்ன குறை என கேட்க அந்த மூதாட்டி எங்கள் பகுதியில் குடிநீர் கிடைப்பது இல்லை. குடிநீருக்காக நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது என கூறினார்.

மூதாட்டி கூறியதை 15 நிமிடம் கேட்ட வேட்பாளர் கார்த்திகா, என்னை வெற்றி பெற செய்தால் உங்கள் பகுதியில் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என கூறினார். உடனே அந்த மூதாட்டி அப்ப நீங்க தான் முதல்வர் என கூறினார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி வேட்பாளர் இந்த பகுதிக்கு ஓட்டு கேட்டு வரவுள்ளார்.

மற்ற வேட்பாளர்கள் போல் ஓட்டுகள் கேட்டால் செய்தி வெளியில் வராது. எனவே வாக்கு கேட்டு வரும் வேட்பாளரை ஓட்டு கேட்க வரக்கூடாது என மறியல் செய்வது போல் நடிக்க ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது வேட்பாளர் குறைகளை கேட்பது போல் கேட்டு அதன் பின்னர் ஓட்டு கேட்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் செய்தி வெளிவரும் என கூறி இதை ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: