தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு அதிமுக மாநில நிர்வாகி முதல்வர் கட்சியில் ஐக்கியம்

புதுச்சேரி அதிமுகவின் துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன். இவர் தனது தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் கட்சிப் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நேற்று மாலை ராஜினாமா செய்தார். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான இவர் கடந்த தேர்தலில் 900 வாக்கு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ்குமாரிடம் தோல்வியடைந்தார்.

இந்த முறை மீண்டும் முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும் மாநில செயலாளர் அன்பழகனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

அதிமுகவில் இருந்து விலகிய கையோடு, திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டில், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் என்.ஆர் காங்கிரசில் இணைந்தார். இதுகுறித்து வையாபுரி மணிகண்டனிடம் கேட்டபோது, ‘முதல்வரை சந்தித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளோம். முத்தியால்பேட்டை தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கிறேன்,’ என்றார்.

Related Stories: