பல்லடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘தேர்தலுக்கு முன்பு வாக்குச்சாவடி பூத் வாரியாக கட்சிகளின் ஓட்டு வங்கியை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
அதிமுக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் வீட்டின் சமையலறை வரை சென்று குடும்ப தலைவிகளிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். நம்முடைய தேர்தல் களப்பணிதான் நமக்கு வெற்றியை ஈட்டித்தரும். தேர்தல் களப்பணிக்கு தங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தேர்தலில் கடுமையாக உழைத்தவர்களுக்கும், அதிக வாக்குகள் பெற்று தந்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் அமையவுள்ளது என்றார்.
