புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு

சென்னை: புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு ஏற்படாததால் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

கடந்த முறை போல, வருகிற சட்டசபை தேர்தலிலும் நீண்ட இழுபறிக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, கூடுதல் தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் இருந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெகத்ரட்சகன் உடன் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: