விருப்பம் இருந்தா சீட் வாங்கிக்க… கூட்டணி பிடிக்கலன்னா ஜாலியா டூர் போ… எதிர்ப்பு தெரிவித்தவர்களை நேரில் அழைத்து ராமதாஸ் டோஸ்

பாமக இரண்டாக உடைந்த நிலையில், அன்புமணி பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இதனால் யாருடன் கூட்டணி செல்வது என்று குழப்பத்தில் இருந்த ராமதாஸ், நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக புதிய கட்சி தொடங்கிய சசிகலாவுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், இந்த கூட்டணி அமைந்ததில் ஜி.கே.மணி உட்பட மூத்த நிர்வாகிகள் யாருக்கும் விருப்பமில்லை. எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார். அருள் எம்எல்ஏ திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சசிகலாவுடன் கூட்டணியை ஏற்க மாட்டோம் என அருள் எம்எல்ஏ கூறியதால், ராமதாஸ் கடும் அதிர்ச்சியடைந்தார். தனக்காக உயிரையே கொடுப்பேன் என்று கூறியவர், தனது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் அப்செட்டில் உள்ளாராம். சொந்த மகனே தனக்கு எதிராக போய் விட்ட நிலையில், இவர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் என நெருக்கமானவர்களிடம் கூறி தனது மனதை ராமதாஸ் தேற்றிக்கொண்டாராம்.

அதோடு கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 9 பேரை, நேரில் அழைத்து விவரத்தை எடுத்து சொல்லியிருக்கிறார். அப்போது, ‘‘தேர்தலில் போட்டியிடுவதாக கூறி நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் தேர்தலில் நிற்கலாம். போட்டியிட விருப்பம் இல்லை என்றால், நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், தேர்தல் முடியும் வரை தேர்தல் சுற்றுலா செல்லலாம். ஆன்மிக பயணம் சென்று விடுங்கள்’’ என்று எச்சரித்து உள்ளார்.

Related Stories: