கீழ்பென்னாத்தூர், டிச.15: கீழ்பென்னாத்தூர் அண்ணா நகரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர், துணை முதல்வர் நேற்றிரவு திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் திமுக சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட 65 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். தொடர்ந்து, கலைஞரின் 14 அடி உயரம் கொண்ட வெண்கல உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்றிரவு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவிற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் மற்றும் துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் இரா.சிவக்குமார், நகர செயலாளர் முருகையன், பேரூராட்சி செயல் அலுவலர் வெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஒன்றிய நகர, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
