செய்யாறு, டிச. 13: செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையான ஆற்காடு – திண்டிவனம் சாலையில் செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினரால் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை செய்யாறு கோட்டப்பொறியாளர் வி.சந்திரன், செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தாசமி தலைமையில் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது உதவிக்கோட்டப்பொறியாளர் எஸ்.சுரேஷ், உதவிப்பொறியாளர்கள் ப.கோபி. அ.கருணாகரன், தூசி காவல் ஆய்வாளர் ஜெகனநாதன், செய்யாறு உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 40க்கும் மேற்பட்ட காவல் துறையினர், வருவாய் துறையினர், மின்சார வாரிய துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் மற்றும் சாலைப்பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் செய்யாறில்
- செய்யாறு
- ஆற்காடு-திண்டிவனம் சாலை
- நெடுஞ்சாலைத் துறை
- செய்யார் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துணைப்பிரிவு
- பிரதேச பொறியாளர்
- வி. சந்திரன்
- செய்யர்...
