பள்ளியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் மாஜி ராணுவ அதிகாரி போக்சோவில் கைது

பண்ருட்டி, டிச. 12: பள்ளியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ அதிகாரியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கடலூர் உண்ணாமலை சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(67), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீட்டிற்கு வந்தவுடன் ஆசிரியர் சங்கர் செய்த செயலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் கடலூரில் உள்ள மையத்தில் ஆலோசனை வழங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: