திருப்போரூர், டிச.12: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய சோனலூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, மீன் வளத்துறை சார்பில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டார். இந்நிகழ்வில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சோனலூர் ஏரியில் உள்நாட்டு மீன் உற்பத்தி தொடக்கம்
- சோனலூர் ஏரி
- திருப்பூருர்
- கடற்றொழில் மற்றும் மீனவர்கள் நலத்துறை
- மீன் விவசாயிகள் மேம்பாட்டு நிறுவனம்
- கிராமப்புற வளர்ச்சி
- உள்ளாட்சித் துறை
- சோனலூர் பஞ்சாயத்து
- திருப்பூரு யூனியன்
