ரயில் மோதி போலீஸ்காரர் பரிதாப சாவு

வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (42). போலீஸ்காரரான இவர், கரூர் ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை பன்னீர்செல்வம் இயற்கை உபாதைக்காக நொய்யல் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பன்னீர்செல்வம் தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் பன்னீர்செல்வம் மீது மோதி விட்டு சென்றது. இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: