திருவண்ணாமலை, டிச. 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்துள்ள நிலையில், மலை மீது மகா தீபம் தொடர்ந்து காட்சி அளிக்கிறது. அதன்படி, நேற்று 6வது நாளாக காட்சி அளித்தது. அதையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சவுமியா அன்புமணி மற்றும் மகள்களுடன் நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்த அவர், சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு சிவாச்சாரியார்கள் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கினர். மலையில் மகாதீபம் காட்சியளிக்கும் நாளில் தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். எனவே, அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்து விட்டு கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அன்புமணி ராமதாஸ் சுவாமி தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
- அன்புமணி ராமதாஸ் சுவாமி
- அண்ணாமலையார்
- கோவில்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- பமகா
- அண்ணாமலையார்
- கார்த்திகை தீபத் திருவிழா
- மகா தீபம்
